எனக்கு கடி ஜோக்ஸ் பிடிக்கும். சிலரது மூளை எப்படி இது போல செயல் படுகிறது என்று ஆச்சரிய படுவேன். உதாரணத்திற்கு இதோ சில -
தயிர் ஏன் வெள்ளையாய் இருக்கு?
தோய்கிறதாலே!
காகம் ஏன் தண்ணீரில் மூழ்குவதில்லை?
அது கரையுமே!
குற்றாலம் அருவியை பற்றிய செய்தி எதையும் நம்பாதே.
ஏன் அப்படி?
அது பால்ஸ் நியூஸ் ஆச்சே!!
எனக்கும் தான் தயிர் தோய்க்கவேண்டும், காகம் கரையும், குற்றாலம் பால்ஸ் என்று தெரியும், ஆனால் என்னால் இப்படி ஒரு கடி ஜோக் கூட உருவாக்க முடியவில்லையே. இதற்கும் 3 - D pictures பார்க்க கற்றுக்கொள்வது போல பழகிக்கொள்ளவேண்டுமோ?
No comments:
Post a Comment