Friday, January 7, 2011

மனதில் பூ பூத்தது

மனதில் பூ பூத்தது

இன்று காலை வேளுக்குடி கிருஷ்ணன் 'பாரதத்தில் தர்மம்' நிகழ்ச்சியில் மஹாபாரதத்தில் இருந்து ஒரு சம்பவத்தை விவரித்தார்.

'பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்த போது ஒருநாள் ஒரு ரிஷி அவர்கள் குடிலுக்கு வந்தார். பாஞ்சாலி அவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்தாள். பசியாக வந்திருப்பவற்கு அமுது படைக்கவேண்டும் என்பது தெரிந்தவளே. ஆனால் பஞ்சபாண்டவர்கள் எல்லோரும் சாப்பிட்டு முடித்து திரௌபதி பாத்திரங்களை கூட அலம்பி வைத்துவிட்டாள். வந்தவருக்கு கொடுக்க எதுவுமே இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணனை நினைத்தாள். ஆபத்பாந்தவனான கண்ணன் உடனே தோன்றினார். திரௌபதி பாத்திரங்கள் அலம்பி வைத்திருக்கும் இடத்துக்கு போய் பார்த்தார். சாதம் வடித்த பானையில் இரண்டு பருக்கை சாதம் ஒட்டிக்கொண்டிருந்தது. அதை வாயில் போட்டுக்கொண்டார். கீரை மசித்த பாத்திரத்தில் கொஞ்சம் கீரை ஒட்டிக்கொண்டிருந்தது. அதையும் எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்'.

வேளுக்குடி இப்படி சொல்லும் போதே என் மனதில் 'இப்படியா பாத்திரம் அலம்புவது?', என்ற எண்ணம் தோன்றியது. அதே நேரத்தில் வெளுக்குடியும் 'இப்படி பாத்திரம் அலம்ப கூடாது நன்றாக பத்துபோக தான் சுத்தம் செய்யவேண்டும். ஆனால் பாஞ்சாலி ராணி அவளுக்கு பழக்கம் போதாது', என்று சொன்னார்.

அவர் சொன்னது எனக்கு பதில் சொன்னார் போல இருந்தது. அவருக்கும் அதே எண்ணம் எழுந்திருக்கிறது என்ற உணர்வும் எனக்கு சந்தோஷமாக இருந்தது.

அதற்கு மேல் கதையை தொடர்ந்து - 'அதை சாப்பிட்டதும் கிருஷ்ணனுக்கு வயிறு நிறைந்துவிட்டது. அவனுக்கு வயிறு நிறைந்தால் உலகில் யாருக்குமே பசிக்காதே. ரிஷி வயிறார உண்ட திருப்தியுடம் வாழ்த்திவிட்டு போனார்', என்று கதையை முடித்தார்.

என் quality standard ஒன்றும் அபரிதமானது இல்லை, அதுதான் norm என்ற எண்ணம் சந்தோஷத்தை அளித்தது. வெகு நேரம் மனதில் பூ பூத்தது.

தினமும் கேட்கும் புராண கதைகள் மூலம் என்னால் என்னையே எடைபோட முடிகிறது.

No comments:

Post a Comment