Thursday, May 13, 2010

காலையில் முதல் செய்தி

காலையில் முதல் செய்தி
தினசரி காலெண்டரில் நாள் மாற்றும் பொது அன்றைய தேதிக்கு ஒரு அறிவுரை சொல்லியிருப்பதை படிப்பேன். அன்றைய விசேஷம், கோயில் பூஜை, திதி போன்றவற்றுடன் கட்டாயமாக அதையும் படிப்பேன்.
பல பின்பற்றதூண்டும். பல அன்றைய மனநிலைக்கு போருத்தமகக்கூட இருக்கும் . நம்பிக்கையுடன் செயல் படு வெற்றி அடைவாய் என்று படித்தாலே வெற்றி அடைந்த திருப்தி இருக்கும். இப்படி செய்தால் நன்மை பெறுவாய், சுகம் தரும், நல்ல உறவை வளர்த்துக்கொள்ள முடியும், ஆரோக்யத்துக்கு உகந்தது என்று பாசிடிவாக சொல்வது பிடிக்கும். ஆசீர்வாதம் போல இருக்கும். அப்படி இல்லாமல் இப்படி செய்யாவிட்டால் எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் என்று காலையில் வந்து முதலில் படிப்பது ஏதோ சாபம் இடுவது போல இருக்கிறது.
மற்றவர்கள் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்களா தெரியவில்லை. நல்ல வார்த்தை சொல்லி புரிய வைக்கவேண்டுமே தவிர பயமுறுத்தி யாரையும் நல்வழிப்படுத்த முடியாது என்று தான் எனக்கு தோன்றுகிறது. இதற்கென்றே ஒருவர் அக்கறை எடுத்துக்கொண்டு செய்யும் பொது இதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே.

No comments:

Post a Comment