Thursday, May 13, 2010

சிரிப்பு வரவேண்டும்

சிரிப்பு வரவேண்டும்
ஜோக்குகளில் கூட எதிர்மறையானது பிடிப்பதில்லை.
ஜட்ஜ் ஒரு பெண்ணிடம் - நீ ஏன் உன் கணவரை நாற்காலியால் அடித்து கொன்றாய்?
(இந்த முதல் வரியே ஜோக் ஆக இல்லை)
பெண் - டேபிளை தூக்க முடியவில்லை
(என்ன ஒரு அஹங்காரம், ஆத்திரம் என்று தான் தோன்றுகிறதே தவிர எனக்கு சிரிப்பு வரவில்லை)
ஜோக் படித்தால் வாய்விட்டு சிரிக்க முடியவேண்டும். மனதில் ஒரு பூ பூக்கவேண்டும். நினைத்து நினைத்து சந்தோஷப்பட முடியவேண்டும். இவர்களுக்கு எப்படி ஒரு சாதாரண விஷயத்தை இப்படி நகைச்சுவை உணர்வுடன் பார்க்கமுடிகிறது என்று வியப்படைய செய்யும் ஜோக்ஸ் தான் எனக்கு பிடிக்கிறது

No comments:

Post a Comment